தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகம், மால்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்ளுடன் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.  இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது


இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் அமலில் இருக்கும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம். அத்துடன் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. மேலும் உணவகங்கள், விடுதிகளில் 100 சதவீதம் பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும் முழுமையாக செயல்பட இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.


ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அது போல் அழகு நிலையங்கள் போன்றவைகளும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தளர்வுகள் எல்லாம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR