தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த சம்பவம் பாஜக அலுவலகத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள வினோத்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. என்ன காரணத்திற்காக குண்டு வீசப்பட்டது, யாரேனும் செய்த தூண்டுதலின் பேரில் இந்த குண்டு வீச்சு நடைபெற்றதா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் கூறும் காரணம்
நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியிருக்கார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்தனத்தை சேர்ந்த வினோத் மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai | An unidentified person allegedly throws a petrol bomb at Tamil Nadu BJP office around 1 am. Details awaited. pic.twitter.com/vglWAuRf5G
— ANI (@ANI) February 9, 2022
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்த குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு போலீசார் பலத்த பாதுகாப்பை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? நீட் வேண்டுமா? வேண்டாமா? ஓர் அலசல்
மேலும்படிக்க | நீட் விலக்கு மசோதா விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR