NEET-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு: சட்டசபை அமர்வில் மசோதா தாக்கல் செய்யப்படும்!!
ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, NEET பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் (Tamil Nadu Assembly), NEET-ல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் கட்டளை மாநில அரசாங்கத்தால் மற்ற இரண்டு முக்கியமான மசோதாக்களுடன் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்படலாம் என்று செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. NEET தொடர்பான இந்த அரச கட்டளைக்கு ஏற்கனவே ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஒப்புதல் (Banwarilal Purohit) அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக நடைமுறையில் உள்ள தனி மனித இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தற்காலிகமாக கலைவாணர் அரங்கத்திற்கு (Kalaivanar Arangam) சட்டசபை இடம் மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் அமர்வு இன்று முதன்முறையாக தொடங்குகிறது.
ALSO READ: COVID Impact: கலைவாணர் அரங்கத்தில் உள்ள ஆடிடோரியத்தில் நடக்கும் தமிழக சட்டசபைக் கூட்டம்!!
இரண்டு சட்டமன்ற அமர்வுகளுக்கு இடையில் இறந்த தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானத்துடன் அமர்வின் முதல் நாள் தொடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில், COVID-19 காரணமாக திமுக எம்.எல்.ஏ ஜே அன்பழகன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து அமர்வு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும். எதிர்க்கட்சி NEET பிரச்சினையை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, NEET பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில். தி.மு.க எம்.கே எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் (MK Stalin) 25 தீர்மானங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர் சட்டமன்றத்தில் எத்தனை தீர்மானங்களைப் பற்றி பேச வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவை எடுப்பார்.
இன்று நடைபெறவுள்ள வணிக ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை அமர்வு எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜே.ஜெயலைத்தாவின் (J Jayalalitha) வீட்டை பொது நினைவுச்சின்னமாக மாற்றுவதற்கான மசோதா மற்றும் COVID-19-க்கான 7,000 கோடி ரூபாய் செலவில் துணை பட்ஜெட் ஆகியவை புதன்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ: தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்.. மத்திய அரசே காரணம்: வைகோ ஆவேசம்