வந்தாச்சு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்!!
பல்வேறு இடைபாடுகளுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிறகு நாளை இடைத்தேர்தல் தொடங்கவுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தனர்.
ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.
இதையடுத்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக இதுவரை மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு கடந்த ஒரு வாரமாக தொடங்கி சூடுபிடித்து நடைபெற்று வந்தது.
அதை தொடர்ந்து,பல்வேறு அரசியல் தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி நேற்று முதல் நாள் மாலை 5 மணியோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடித்துக்கொண்டனர். மேலும் இந்த இடைத்தேர்தலில் எந்தவித ஊழலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்புகளை அறிவித்து உள்ளது.
வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்துவதற்கு ரூ.75 லட்சம் வரை மட்டுமே செலவாகும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தற்போது வரை மட்டும் ரூ.3 கோடி வரை செலவாகியுள்ளதாக கூறியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தற்போது இந்த மனுவை இன்று விசாரித்த டில்லி ஐகோர்ட், ஆர்கே நகர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நாளை தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பல்வேறு இடைபாடுகளுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.