‘ஆந்திரா தாய் வீடு ; தமிழ்நாடு மாமியார் வீடு’ - ரோஜா
ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்த ரோஜா திடீரென அரசியலில் இணைந்தார். ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ரோஜா, அங்கு தேர்தலில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் அமைச்சரவையில் ரோஜா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஜாவுக்கு இடம் அளிக்கவில்லை.
மேலும் படிக்க | நடிகை டூ அமைச்சர்: ரோஜா அரசியலில் பெண் ஆளுமையாக உருவானது எப்படி?
இதையடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுத்து அனைத்து அமைச்சர்களிடமும் ராஜினாமா கடிதம் கேட்டார். இதையடுத்து ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரோஜா இடம்பெற்றுள்ளார். அவருக்கு, சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் ரோஜா, சாமி தரிசனம் செய்வதற்காக வருகை வந்துள்ளார். அதன்படி, உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க | ஒரு கிலோ பிளாஸ்டிக்கு பதிலாக, ஒரு கிலோ அரிசி: எம்.எல்.ஏ. ரோஜா
அதன் பின் செய்தியாளர்களிடம் ரோஜா பேசியதாவது, "ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிராத்தனை செய்தார்கள். அதே போல் தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு. இங்கேயும் எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. நான் முதல் படம் நடித்தது முதல் தற்போது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன். என்னோட வேண்டுதலை காமாட்சி நிறைவேற்றியுள்ளார். அதற்கு பிரார்த்தனையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளேன். எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் தொடங்குவேன் . எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘RRR’ க்கு இப்படியொரு அரசு சலுகையா?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR