Happy Birthday Roja: நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ரோஜா பல சோதனைகளை கடந்து அமைச்சராக பதவியேற்றுள்ளார். அரசியலில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி. ஹேப்பி பர்த்டே ரோஜா!!
இந்தி மொழி நமது தேசிய மொழி என்று கூறுவது தவறானது. அது அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நடிகை மதுபாலா கருத்துத் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ ரோஜா, ஒரு புதிய திட்டத்தை செயல் படுத்தி உள்ளார். அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்களுக்கு ஒரு கிலோ அரிச வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ, நடிகையுமான ரோஜாவை போலீஸார் கைது செய்தனர்.
அமராவதியில் தேசிய மகளிர் நாடாளுமன்றம் என்ற பெயரிலான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பிலும், வரவேற்புக் குழுவிலும் ரோஜா உறுப்பினராக உள்ளார். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாதில் இருந்து விமானம் மூலம் விஜயவாடாவுக்கு ரோஜா நேற்று வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அங்கு காத்திருந்த போலீஸார் ரோஜாவை கைது செய்தனர். இதனால் ரோஜாவிற்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.