காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உறுப்பு கல்லூரியான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நான்கு துறைகளில் சுமார் 1000 மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவர் செய்த முறைகேடு கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, இக்கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறப்படும் பணம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி ( FD) கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பை படித்து முடித்த பிறகு மாணவ மாணவிகளுக்கு அந்த பணம் மீண்டும் திருப்பி செலுத்தப்படும். ஆனால் கல்லூரி முடித்து செல்லும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக பணம் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது. சிலருக்கு தாமதமாக பணம் சென்றுள்ளது. இது குறித்து மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 


இதனை அடுத்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்த பொழுது வங்கி கணக்கில் வெறும் ரூ.401 மட்டுமே இருந்துள்ளது. இதேபோல் பிற வங்கி கணக்குகளையும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவற்றையும் விசாரித்துள்ளார். கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்ட பொழுது அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை பல்வேறு வகைகளில் பிரபு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இது குறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் தேடுகிறார்கள் என தெரிந்தவுடன் தலைமறைவான பிரபு பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பிரபு ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர். ஆந்திராவில் இருந்த பிரபுவை கைது செய்த காவல்துறையினர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ