பேரறிவாளன் விடுதலை - கண், வாயில் கருப்புத் துணியை கட்டி தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புத் துணியை கண் மற்றும் வாயில் கட்டி காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மல்லூர் பகுதியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காந்தி சிலை முன்பு கருப்பு துணியால் கண்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி Rti பிரிவின் மாநில தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!
தர்ணாவில் கலந்து கொண்ட RTI மாநிலத் தலைவர் கனராஜ் கூறுகையில், இந்த தீர்ப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது என்றும் தற்பொழுது விடுதலையாகி உள்ள பேரறிவாளன் எந்த ஒரு கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது; பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறினார். மேலும் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை காங்கிரஸ் கட்சிக்கு தீர்ப்பு மிகப் பெரிய வேதனையாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | இனி உங்கள் கண்கள் உறங்கட்டும்; கால்கள் இளைப்பாறட்டும் - வாழ்த்துகள் அற்புதம்மாள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR