தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவுக்குள் குரல் எழுந்திருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவுக்குள் குரல் எழுந்திருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
இதற்கிடையே சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதுமட்டுமின்றி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவுக்குள் குரல்கள் எழ ஆரம்பித்திருக்கும் நிலையில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சசிகலாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பிரதமரைப் போல செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளூர் ஷா நவாஸ்
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு நேற்று இரவு சென்ற சசிகலா பேருந்து நிலையத்தில் இருக்கும் சின்னாண்டி பக்தர் சிலை, ராஜாஜி சிலை, காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா அதிமுகவை வளர்த்தார். ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பெரிய ஆதரவு கொடுத்துவந்தனர். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்திருக்கிறது.
மேலும் படிக்க | மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை, சென்னையில் சிக்கிய கும்பல்
ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக அதிமுகவினர் உழைத்தார்கள். மக்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தார்கள். தொண்டர்களால்தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சியை அமைத்து தமிழ்நாடு மக்களை காத்திடுவேன். இது உறுதி” என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR