கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்து ஒன்றை வழிமறித்த காட்டு யானை ஒன்று அந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்தது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி (Nilgiri) மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களிலேயே யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. 


இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை (Elephant) ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது. அதனை பார்த்து அதுவரை இருக்கையில் அமர்ந்திருந்த  பேருந்து ஓட்டுனர் ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார். 


ALSO READ: Viral Video: பாகனுக்கு கண்ணீருடன் இறுதி வழியனுப்பு விழா நடத்தும் பாசக்கார யானை


அதன்பின் யானை பேருந்துக்கு பின்புறமாக சென்றுவிட்டது. யானையை பார்த்து பயப்படாமல் பேருந்து பயணிகளை பாதுகாத்த ஓட்டுனருக்கு பேருந்து பயணிகள் நன்றி தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பதட்டம் நிலவியது. இதனை அந்த பேருந்தில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.



யானைகள் இந்த விதத்தில் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும், மக்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்துவதும் கடந்த சில காலமாக அதிகமாக நடப்பதை பார்த்து வருகிறோம். எனினும், இது போன்ற தருணங்களில் நமது சமயோஜித புத்தி நம்மை காப்பாற்றும் என்பதற்கு இந்த சம்பவம ஒரு உதாரணமாக அமைகிறது. 


ALSO READ: Elephant family: 500 கி.மீ வீதியுலா வரும் சீனாவின் யானை மந்தைகள் Viral


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR