ஊட்டி மலை ரயிலுக்கு புதிதாக நான்கு பெட்டிகள் இணைப்பு!

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயங்கும் ரயிலுக்கு, புதிதாக நான்கு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது!

Last Updated : Mar 18, 2019, 02:51 PM IST
ஊட்டி மலை ரயிலுக்கு புதிதாக நான்கு பெட்டிகள் இணைப்பு! title=

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயங்கும் ரயிலுக்கு, புதிதாக நான்கு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது!

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே தினசரி மலை ரயில் இயக்கப்படுகிறது. பயணியர் வசதிக்காக இந்த மலை ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப் படவுள்ளது. இதற்காக சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட, நான்கு பெட்டிகள், நேற்று மேட்டுப்பாளையம் வந்தன.

ஈரோட்டிலிருந்து வந்த, 150 டன் எடையை துாக்கும் சக்தி வாய்ந்த கிரேன் மூலம், புதிய நான்கு ரயில் பெட்டிகள், தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டன.

ரயில்வே பணியாளர்கள் சுமார் 20 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். புதிதாக வந்துள்ள ரயில் பெட்டியில், இருக்கைகள் விசாலமாகவும், ஒவ்வொரு பெட்டியிலும், 'பிரேக்ஸ்மேன்கள்' நிற்பதற்கு தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

---ஊட்டி மலை ரயில்---

உலக புகழ் பெற்றது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுபாளையம் முதல் குன்னூர் வரை சுமார் 23 கிமீ தொலைவுக்கு பல் சக்கரம் அமைக்கப்பட்ட பாதையில் 13 கிமீ வேகத்தில் மலை ரயில் ஊர்ந்து செல்கிறது. மேலும் ஓர் ஆண்டாக மேட்டு பாளையம் குன்னூர் இடையே நான்கு பெட்டிகளுடன், குன்னூர்-ஊட்டி இடையே ஐந்து பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது. இங்கு செல்லும் ரயில்பெட்டிகளை பார்ப்பதற்கு பாம்பு ஊர்ந்து செல்வதுபோல இருக்கும். 

Trending News