சென்னை: நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதியான நிலையில், பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு புதிதாக இன்னும் பஸ்-பாஸ் வழங்கப்படாததால், பேருந்துகளில் எப்படி பயணம் செய்வது என்ற ஒரு குழப்பம் நிலவி வந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


அதாவது நவம்பர் 1ஆம் தேதி நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவி - மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கு வரும் மாணவி - மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள பழைய இலவச பஸ் பாஸ் அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ஒருவேளை மாணவி - மாணவர்களிடம் பழைய பஸ் பாஸ் இல்லை என்றால், பள்ளி சீருடையில் பயணிக்கலாம் அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தோ இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 


ALSO READ |  மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை- அன்பில் மகேஷ் பொய்யாமொழி


தமிழ்நாட்டில் கொரனோ வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து, பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஏற்கனவே 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவி - மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. 


தற்போது  நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மான்வ - மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று பள்ளி (TN Schools) கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) தெரிவித்துள்ளார்.


ALSO READ |  நவம்பர் 1 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR