சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1 முதல் 8 ஆம் வகுப்புகல் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாதம் 14 ஆம் தேதி தமிழக அரசு கொரோனா தொற்றுக்கான (Coronavirus) கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அந்த தளர்வுகளின் பள்ளிகள் திறப்பு குறித்த பல முக்கிய அறிவிப்புகளும் இருந்தன.
அந்த தளர்வுகளில், நவம்பர் 1 முதல் அங்கன்வாடி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், ஆகியவையும் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளின் அனைத்து ஊழியர்கள், ஆசிரொயர்கள், நிர்வாகிகள் என அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்தமுறை அரசு அறிவிப்பில் நர்சரி திறக்கப்படும் என வந்த அறிவிப்பு தவறாக அச்சடிக்கப்பட்டு விட்டது என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது
நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் (TN Schools) திறக்கப்படுவது குறித்து வந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்கள் சிறு குழந்தைகளை முதன் முதலாக பள்ளிகளில் சேர்க்க நினைத்த பெற்றோர் அதற்கு ஆர்வம் காட்டினர். எனினும், இதில் சிறு குழப்பமும் இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன்னர், ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியடப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) தெரிவித்தார்.
இதை உறுதிபடுத்தும் வகையில் இன்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நவம்பர் 1 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR