தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடல் -MK ஸ்டாலின்!
தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.
நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத்தினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தனது கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின்., தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகின்றன. ஆனால், இதை கண்டும் அரசு மௌனம் காப்பாதக குறிப்பிட்டுள்ளார்.