கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..!
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..!
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் (Tamil Nadu), புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் (Heavy Rain) என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை (Madurai) மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 13 ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய (Rain) வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இந்நிலையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி (Puducherry) மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் (Karaikal) பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR