தம்பி செந்தில் பாலாஜி பாஜக டார்ச்சர் செஞ்சா சொல்லு நான் பார்த்துக்குறேன் - களத்தில் சீமான்
பாஜக டார்ச்சர் செய்தால் செந்தில் பாலாஜி தன்னிடம் சொல்ல வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று ஒன்றிய அரசு பலமுறை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி கடிதங்களும் எழுதியது’ என்றார். இந்தச் சூழலில் மின் கட்டண உயர்வுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்தன. பாஜக சார்பிலும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு எதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். நிலைமை இப்படி இருக்க தமிழக பாஜக நடத்தும் போராட்டமெல்லாம் இந்த விஷயத்தை அரசியலாக்குவதற்காகத்தான் என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மின் கட்டண உயர்வு... தமிழக அரசை மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை - பாஜக துணை தலைவர்
ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய சீமான், “தம்பி செந்தில் பாலாஜிக்கு அண்ணன் என்ற முறையில் அன்போடு சொல்கிறேன். மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக சொல்லதீர்கள். உங்களுக்கு கூச்சமா இருந்தா, பாஜக டார்ச்சர் செய்தால் என்னிடம் சொல்லுங்கள்.
பாஜக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நிறுத்தவில்லையென்றால் அண்ணாமலை வீட்டை முற்றுகையிடுவோம், பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். என்ன இங்கு நாடக கம்பெனி வைத்து நடத்திட்டு இருக்க. என்ன வேலை பார்த்துட்டு இருக்க நீ.
கர்நாடகாவுல மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கொடுப்பது உன் அரசு. ஒன்றிய அரசு. இங்கே என்ன எங்களோடு சேர்ந்துகொண்டு அய்யோ அம்மானு சொல்ற. எங்க அப்பா செத்துட்டாருனு நான் அழுதுட்டு இருக்கேன். கொலை பண்ண நீயும் கூட உட்கார்ந்து அழுதுட்டு இருக்க. தம்பி இதெல்லாம் நல்லா இல்ல தம்பி.
மனச்சான்றோடு வேலை செய்யுங்கள். திடீர்னு வந்து மின் கட்டணத்தை குறைக்க சொன்னா. முதலில் அங்கு போய் சொல்லு.ஜிஎஸ்டியை பற்றி முதலில் பேசு. அதை நியாயப்படுத்து. இந்த வரியெல்லாம் சரி என்கிறீர்களா. மனச்சான்றோடு அரசியல் செய்யுங்கள்” என்றார்.
சீமான் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் இல்லை என்பதற்கு இதைவிட சான்று என்ன வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ