துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதா: சீமான் வரவேற்பு!
அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானும் தனது ஆதரவை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானும் தனது ஆதரவை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக பிரமுகர் மர்ம மரணம்: கொலைக்கான பின்னணி என்ன? காவல்துறை விசாரணை!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன். உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டமுன்வடிவைக் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், அதனையேற்று செயலாக்கம் செய்திருக்கும் திமுக அரசின் முடிவு மிகச்சரியான முன்நகர்வாகும்.
மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட தமிழகச் சட்டமன்றத்தினைத் துளியும் மதியாது, அதன் மாண்பினையும், மதிப்பினையும் குலைத்திடும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்குக்கும், அதிகார அத்துமீறலுக்கும் முடிவுகட்டி, மாநிலத்தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டுமெனும் நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி உறுதிபூண்டு நிற்கிறது. ஆகவே, தமிழகச்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டவரைவுக்கு நாம் தமிழர் கட்சி தனது தார்மீகமான ஆதரவினை வழங்குகிறது.
இத்தோடு, மத்தியப்புலனாய்வுத்துறை விசாரணைக்கான மாநில அரசின் பொதுஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தையும் இச்சமயத்தில் வலியுறுத்துகிறேன். முன்னதாக, ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், மராட்டியம் போன்ற மாநிலங்களின் அரசுகள் மத்தியப் புலனாய்வுத்துறைக்கு வழங்கிய மாநில அரசின் பொது ஒப்புதலை ரத்துசெய்திருக்கும் நிலையில், தமிழக அரசும் அதனைப் பின்பற்றி மாநிலத்தன்னுரிமையை நிறுவ முற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
அதேபோல விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில், “துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்டமசோதா இன்று பேரவையில் நிறைவேறியிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். ஆளுநரின் தலையீட்டைத் தடுக்கும் இம்மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றாலும் மாநில உரிமைக்கான போர்க்குரலாக இது பதிவாகட்டும். முதல்வருக்கு பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR