செங்கல்பட்டு அருகே செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி
செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி: உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
சென்னை: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவில் வசிக்கும் அசோக்(24), மோகன்(17) பிரகாஷ்(17) மூன்று பேரும் நண்பர்கள்.
சுகுமார் என்பவருடைய மகன் அசோக்(24), குமார் என்பவருடைய மகன் மோகன்(17) ராமு என்பவருடைய மகன் பிரகாஷ்(17) இந்த மூன்று நண்பர்களும் ஒன்றாக இணைந்து வீடியோக்களை (Video) எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது வழக்கம்.
நண்பர்கள் மூவரும் வழக்கம்போலவே நேற்று மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த மூவரும் ரயில் வருவதை கவனிக்காமல் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
இதனால், எதிர்பாராத விதமாக ரயில் மோதியது. இந்த விபத்தில் அசோக், மோகன், பிரகாஷ், ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்
தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் மூன்று இளைஞர்களுடைய சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செல்பி மோகத்தால் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் மோதிய விபத்தில் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கொரோனா கவச் பாலிசியை செப்டம்பர் வரை நீட்டித்தது IRDAI
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR