இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா.பாண்டியன் (CPI leader Tha. pandian) உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.


சிறுநீரகப் பிரச்னையால் (Kidney problem) பாதிக்கப்பட்டிருந்த தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் (Rajiv Gandhi Government General Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.


ALSO READ | ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS


இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (பிப்.25) காலை தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார். இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.


இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவரது மறைவிற்கு தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தேசிய அரசியல்வாதிகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR