செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட கருத்துகளுடன் நீதிபதிகள் தீர்ப்பு..! தீர்வு என்ன..?
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளுடன் தீர்ப்பளித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆட்கொணர்வு மனு தாக்கல்..
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க | அமைச்சர் செந்தில்பாலாஜி கைது வழக்கு! நீதிபதிகள் சொன்ன தீர்ப்பு!
வழக்கு விசாரணை..
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். இவர்கள் இந்த வழக்கில் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
நீதிபதி ஜெ. நிஷா பானு தீர்ப்பு
மேலகாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
நீதிபதி D. பரத சக்ரவர்த்தி தீர்ப்பு...
ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம்.
அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்பு..
மேகலா தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.
என்னதான் தீர்வு..?
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதன் காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு அனுப்ப, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி நியமிக்கும் மூன்றாவது நீதிபதி, வழக்கை விசாரித்து அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ