அரசியல் காழ்புணர்ச்சி... எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் - தங்கம் தென்னரசு!

DMK Against Governor: ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆளுநர் ஆர். என். ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 30, 2023, 03:32 PM IST
  • ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்கிறோம் - தங்கம் தென்னரசு
  • செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்கிறார் - ரகுபதி
  • ஆளுநரின் உத்தரவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை - வில்சன்
அரசியல் காழ்புணர்ச்சி... எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் - தங்கம் தென்னரசு! title=

DMK Against Governor RN Ravi: சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு‌ கூறியதாவது,"சட்டப்படி அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதலமைச்சர் இன்று எழுத உள்ளார்.

இல்லாத பூனையை தேடுகிறார்

மேலும் ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். முதல்வரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமனம், நீக்கம் தொடர்பான விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுகுள் தேடுவது போல ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.  மலை இலக்கனால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர்கட்சியினர்  மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுகவினர் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி -க்கு ஒரு கேள்வி': இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர். ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். மேலும் திமுக இதுபோன்ற விவகாரங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும். எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான். 

விசாரணைக்கு பாதிப்பு இல்லை

இதனை தொடர்ந்து எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் முடிவு செய்வார். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்" என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்கிறார் எனவும் ஆகவே இது விசாரணைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

நிராகரிக்கப்பட வேண்டும்

இதையடுத்து, பேசிய வழக்கறிஞர் வில்சன்,"அரசியல் அமைப்பு சட்ட சரத்துக்களை பின்பற்றாமல் செயல்படும் ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை. மேலும் ஆளுநரின் உத்தரவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றில்லை அது நிராகரிக்கப்பட வேண்டும்" என்றார். 

உத்தரவு நிறுத்திவைப்பு

அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் மாளிகையில் திடீரென நேற்று இரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து தங்களின் கருத்தை தெரிவித்தனர். 

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் இன்று காலை நிறுத்திவைத்தார். செந்தில் பாலாஜி நீக்கம் பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலால் தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. தனது முடிவை நிறுத்தி வைத்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஆளுநர் விளக்கமளித்தார். 

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News