Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாகத்துறையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மூன்று ரத்த நாளாங்களில் அடைப்பு இருப்பதாக தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, அவரை கைது செய்ததற்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ கூறவில்லை என்றும் கைதின்போது முறையான நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். 


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை


ஆட்கொணர்வு வழக்கு


இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீது அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை தரப்பில்,"ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டதால், இன்றைக்கு இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல, விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால் குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலை எங்கள் பொறுப்பு. அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம். நியாயமான அறிக்கை தேவை என்பதால் எய்ம்ஸ் குழு சோதனை கோருகிறோம்" என தெரிவிக்கப்பட்டது.


செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ,"தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். அதனால் இந்த ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல என கூறலாம். ஆனால், ரிமாண்ட் சட்டவிரோதமாக இருந்தாலோ, இயந்திரத்தனமாக இருந்தாலோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காவேரிக்கு மாற்ற அனுமதி


செந்தில் பாலாஜிக்கு கைதுக்கான காரணங்களும், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த பரிந்துரைத்துள்ளனர். காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு பரிசோதித்து கொள்ளட்டும்" என வாதிட்டார். ரிமாண்ட் செய்யும் போது அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, என்ன வழக்கில் உங்களை கைது செய்திருக்கிறார்கள் என தெரியுமா எனக் கேட்டதற்கு, தெரியும் என செந்தில் பாலாஜி பதிலளித்தார் என்பது இங்கு உறுதி செய்யப்பட்டது. 


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்தார்கள் என்றனர். மேலும்,"மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது. நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும். அமலாக்க பிரிவு நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம். பிரதான ஆட்கொணர்வு மனு ஜூன் 22ஆம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது" என்றார். 



விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை


இந்த உத்தரவை அடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மற்றும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணை மேற்கொண்டார். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானார். அமலாக்கத்துறையினரின் மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி கேள்வியெழுப்பினனர். தொடர்ந்து, வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு,"விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார். புலன் விசாரணை அதிகாரி சுதந்திரமாக விசாரானை நடத்தி உண்மையை கண்டறிய அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம்" என குறிப்பிட்டது.


அமித்ஷா வருகைக்கு அடுத்த நாளே...


செந்தில் பாலாஜி தரப்பு,"மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வந்து, 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை ஏவல் அமைப்பாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும். ஜூன் 13ஆம் தேதி காலை 7 மணி முதல் 14ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.


ஜாமீன் வழங்க வேண்டும்


செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் ஏற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்துள்ளது. அதனால் அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டனர். 


அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரிய வழக்கில், 'உங்களுக்கு விருப்பம் உள்ளதா' என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வியெழுப்பினர். அதற்கு விருப்பமில்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவு நகலை பெற்ற பின் காவல் கோரிய மனு மீது உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தார். அமலாக்கத்துறை மனு மீதான உத்தரவு சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. 


மேலும் படிக்க | 'உத்தமபுத்திரன் பாஜக... எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்' முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ