Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை அடுத்த மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான பிச்சை ராஜ். இவருக்கு வயது 52. இவர் முன்னாள் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18ஆவது வார்டு வேட்பாளராகவும் போட்டியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதுங்கிய இருந்த மர்ம நபர்கள்


இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பிச்சை ராஜ் பேட்டை எம்ஜிஆர் நகர் பாரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக வரும்போது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிச்சை ராஜ் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.


ஆம்புலன்ஸில் உயிரிழப்பு


இதில் படுகாயம் அடைந்த பிச்சை ராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அந்த வழியாக வந்த நபர்கள் பார்த்து பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் வந்த போலீசார் பிச்சை ராஜ் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிச்சை ராஜ் உயிரிழந்தார். 


மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!


மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது 


இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.  


நெல்லையில் பரபரப்பு


இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கமிஷ்னர் உத்தரவு


பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது. மேலும், நெல்லை மாநகர் பகுதி முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் படிக்க | இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ