அதிர்ச்சித் தகவல்: சென்னை ரேஷன் கடையில் ரூ. 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், ஒரு நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளி வந்துள்ளது.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், ஒரு நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி (Corona Relief Fund) வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காவேரி நகர் நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ரேஷன் கடை மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சைதாப்பேட்டை காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இது குறித்த விசாரணையை துவக்கியுள்ளனர்.
முன்னதாக, திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு (TN Government), அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை சனிக்கிழமை (15-5-21) முதல் வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தை 10 ஆம் தெதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் தவணையை அளிக்கத் தொடங்கியதற்காக பொது மக்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.
தற்போது கொரோனா (Coronavirus) இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளபடியால், நிவாரண நிதியை பெற நியாய விலை கடைகளுக்கு வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. கூட்ட நெரிசலின்றி, நிவாரண நிதியை மக்களுக்கு வழங்க டோக்கன் முறை பின்பற்றப்படும் என கூறப்பட்டது.
மக்கள் கூட்டம் அதிகமாவதைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நபர்களுக்கே நிவாரண நிதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், கொரோனா நிவாரணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ALSO READ: 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR