5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2021, 07:12 PM IST
5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு title=

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தினசரி தொற்று பாதிப்பு, 30,000 என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை நாட்டில் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 13 லட்சம் தடுப்பூசிகள் (Corona Vaccine)  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 18 – 45 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை,  மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளது.  ஆனால், இதற்கான போதுமான தடுப்பூசி இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ | ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் சிலிண்டரை பதுக்கி வைத்தால் குண்டர் சட்டம் -முதலமைச்சர் எச்சரிக்கை

இதை அடுத்து 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 5ம் தேதி பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் இறுதி செய்யப்படும் எனவும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிக விலையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின்  எச்சரித்துள்ளார்.

ALSO READ | ரெம்டெசிவிர் மருந்தை வாங்க சென்னையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News