சென்னை: 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்கான முதல் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் திருச்சியில் (Trichy) செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் (Kamal Haasan), "தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. தமிழகத்தில் குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா, சொத்து வரி, மின் இணைப்பு வரை லஞ்சம். அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 லஞ்சம் பெறுகின்றனர்". 


ALSO READ | தமிழகத்தில் MNM ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - கமல் அதிரடி!


தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் (Rajinikanth) என்ற கேள்விக்கு உடல்நலம் தான் முக்கியம் என பதில் அளித்தார். 


ரஜினிகாந்தின் உடல்நலத்தின் அடிப்படையில் யூகமான தகவல்களை வெளியிடக்கூடாது. ரஜினிகாந்த் உடல்நலம் சரியான பின் பணிகளை தொடங்குவார் என நம்புகிறேன் என்று கூறினார்.


ALSO READ | ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR