ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு

ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 07:53 PM IST
  • கிறிஸ்துவர்களுக்கு புனித யாத்திரை உதவித் தொகை அதிகரிப்பு
  • கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • 2020-21 ஆண்டு முதல் உதவித்தொகை அதிகரிப்பு அமலுக்கு வரும்
ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு title=

புதுடெல்லி: ஜெருசலேம் புனித யாத்திரைக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அஇஅதிமுக சார்பில் சென்னையில்  (Chennai) நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கேக் வெட்டினார் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஜெருசலேம் (Jerusalum)  புனித யாத்திரைக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகையை (subsidy) 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதோடு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உணர்வில் இருந்து அதிமுக ஒருபோதும் மாறாது. கிறிஸ்துமஸ் (Christmas), ரம்ஜான் போன்ற பண்டிகைகளை ஒரு குடும்ப நிகழ்வாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் (Chief Minister) தெரிவித்தார்.

கட்சியின் மாபெரும் தலைவர்களான எம்ஜிஆர் (MGR), ஜெயலலிதா (Jayalalitha) காட்டிய பாதையில் மக்களின் நலன்கள், உரிமைகளையும் பாதுகாத்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி ஆட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Also Read | பரிசுகளை வழங்கும் Santa Claus கொரோனா காலத்தில் வைரசை வழங்கினார்: பெல்ஜியத்தில் பரிதாபம்

நாட்டிலேயே முதல்முறையாக கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஜெயலலிதா தான் துவங்கி வைத்தார் என்பதை நினைவுகூர்ந்தார் முதலமைச்சர். 

2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வோருக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. இனிமேல், இந்த உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

2020-21 ஆண்டில் தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைப்பு, பழுது நீக்குவதற்கான நிதி ஒதுக்கீடு ஒரு கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்தார். 

Also Read | Hi-Tech ஆனது அரச குடும்பம்: Alexa மூலம் வரும் இங்கிலாந்து ராணியின் Christmas wish

இந்த கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கிறிஸ்தவப் பேராயர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News