சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய்   பாதுகாப்பு போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஒன்று சிக்னல் ஆஃப் செய்து வைத்து இருந்ததால், வலது புறம் ஏறி சென்று விடலாம் என ஆட்டோ ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். கான்வாய் பாதுகாப்பில் இருந்த பெட்டாலியன் காவலர் மகேந்திரன் என்பவர் முதல்வர் கான்வாய் பைலட் வாகனம் மிக அருகில் வந்ததால் வலது புறம் சென்ற ஆட்டோவை இடது புறம் வருமாறு கூறியிருக்கிறார். வேகமாக வந்த ஆட்டோ உடனடியாக இடது புறம் வரவே வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ இடது புறம் வருமாறு கூறிய காவலர் மீது மோதி ஆட்டோ கிழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாடங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத் இவரது மகன் அலோக்நாத் தர்ஷன் என்ற 5 வயது குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆடி அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!


உடனடியாக மற்றொரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அடிபட்ட குழைந்தையை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையான சக்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதலமைச்சர் கான்வாய் சிறிது நேரம் நின்றுள்ளது, இது குறித்து முதலமைச்சருக்கு தகவல் தெரியவரவே  உடனடியாக குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றும் படி உத்தரவிட்டார். மேலும், உடனடியாக என்னவென்று பாருங்கள்.. என்ன செலவு ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என முதலமைச்சர்  கூறியுள்ளார். இதனை அடுத்து குழந்தையை சக்தி மருத்துவமனையில் இருந்து கிரீம்ஷ் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பிறகு அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கு குழந்தையின் உடலை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


போரூர் அருகே போலீஸ்காரர் பலி


மறுபுறம் போரூர் சுங்கச்சாவடி அருகே பைக் மோதி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் குமரன் (53). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் போருர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று பிற்பகல் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். 


அப்போது தாம்பரத்தில் இருந்து அதி வேகமாக வந்த மற்றொரு பைக் குமரன் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் மீது வேகமாக பைக்கில் வந்து மோதியவர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ்காரர் குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சென்னையில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன்..! இறுதிப்போட்டியில் 25 பேர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ