சென்னையில் முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன் நடந்தது. இதில் கலந்து கொள்ள 50 போட்டியாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தேர்வு செயல்முறைகளுக்குப் பிறகு 45 போட்டியாளர்கள் ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சிறந்த ஒப்பனைகளை அண்ணாநகர் லக்மே செய்து கொடுத்த நிலையில், லக்ஷ்மி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் நிறுவனமும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் முக்கிய பங்கு வகித்தது.
கலந்து கொண்ட போட்டியாளர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் டாக்டர் எஸ்தெடிக்ஸ் இன்டர்நேஷனல் காஸ்மெடிக் கிளினிக் சென்னையின் நிறுவனர் டாக்டர் ஹேமமாலினி, செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் மற்றும் கோலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் மிஸ் ஹினா ஏஸ், ஒப்பனை/பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர். ரஜினிகாந்த் தியாகராஜன், மாடல் மற்றும் மாடல் பயிற்சியாளர் நடிகை நயனா சாய் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆடிஷனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மூன்று சுற்று சோதனைகள் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் சவாலான கேள்வி பதில் அமர்வு உட்பட தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பாலின சமத்துவத்தை பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு திருநங்கைகளின் பங்கேற்பும் இருந்தது. அந்தவகையில் பார்க்கும்போது இது முற்போக்கான அணுகுமுறையை பிரதிபலிக்கும் விதமாகவும் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன் அமைந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 25 இறுதிப் போட்டியாளர்களுக்கு ஆகஸ்ட் 8 முதல் சென்னை ஹையாட் ரீஜென்சியில் இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் சீர்ப்படுத்தல் மற்றும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். பெங்களூர் டிசைனர்ஸ் செல்வி. சசி ரேகா, ஒப்பனையாளர் மெஹந்தி ஜஷ்னானி, மாடல் பயிற்சியாளர் திருமதி நயனா சாய், உடற்தகுதி பயிற்சிக்கு பர்ன்அவுட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஆகியோர் கலந்து கொண்டு அவர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் நமிதா மாரிமுத்து, ரிஷிதா, வர்ஷினி, ரோஷ்னி, ஸ்ரீநிதி, சோனியா, நம்ரதா, சினேகா, அன்னே லக்ஷிதா, அபூர்வா, ஷாலினி, தனுஷா, ஜெயஸ்ரீ, மேகலா, மீனாட்சி மனோகர், புவனேஸ்வரி, அபிநயா, ஸ்ரீவித்யா, அபிநயா, தர்ஷனா, நளினி, சந்தனா அலிஷா, மன்சுரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | நெல்லை கொடூரம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - தலைமறைவான சக மாணவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ