உயிர் காக்கும் ஹெல்மெட்டிற்கு காலாவதி தேதி உண்டா..... சில முக்கிய விபரங்கள் இதோ...!!

Helmet For Safe Driving: இருசக்கர வாகனம் ஓட்டும் போது, உயிர் காக்கும் ஹெல்மட்டை அணிவது மிக அவசியம். ஹெல்மெட் அணியாமல் செல்வதால், விபத்துக்களின் போது, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

ஹெல்மெட் அணிவதை அரசுகள் கட்டாயமாக்கியுள்ளதோடு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

1 /7

Helmet For Safe Driving: பைக் ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணிவதால், உயிர் இழப்பு தடுக்கப்படுகிறது. இன்னும் நீங்கள் அணிந்திருக்கும் ஹெல்மெட், தரமானதாகவும், நல்ல நிலையில் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

2 /7

பலருக்கு ஹெல்மெட்டை எப்போது மாற்ற வேண்டும், பிற சாதனங்களை போலவே, அதற்கு காலாவது தேதி ஏதேனும் உண்டா,  ஹெல்மெட் சேதடைந்து விட்டால் அதனை பழுது பார்த்து அணியலாமா, பாதுகாப்பை வங்கும் ஹெல்மெட்டை பராமரிப்பது எப்படி  போன்ற பல கேள்விகள் விழலாம்.

3 /7

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியும், மங்கலாகி பார்வை திறன் குறையும், இதனாலும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு.  

4 /7

ஹெல்மெட்டின் வெளிப்புற அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்பதோடு, அதில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியும் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் ஹெல்மெட்டில் உள்ள முகத்துடன் இணைக்கும் ஸ்ட்ராப் போன்றவை, நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

5 /7

ஹெல்மெட்டின் வெளிப்புற அமைப்பு, கண்ணாடி, மற்றும் அதில் உள்ள கிளிப்புகள் பழுதடைந்தால், புதிய ஹெல்மெட்டை மாற்றி விடுவது நல்லது. ஏனெனெனில், இதன் மூலம் உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. 

6 /7

நாம் வாங்கும் வாகனம் பைக் அல்லது ஸ்கூட்டர் எந்த பிராண்டை சேர்ந்ததோ, அந்த பிராண்டின், தரமான ஹெல்மெட்டை வாங்குவது சிறப்பு. மேலும் ஹெல்மெட் வாங்கும்போது விலையை பார்க்காமல் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விலைமதிப்பற்ற உயிருடன் ஒப்பிடும்போது அதன் விலை குறைவு தான்.

7 /7

வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் கீழே விழுந்து சேதம் அடைந்தாலும் அதனை கண்டிப்பாக உடனே மாற்றி விட வேண்டும். கீழே விழுந்த அதிர்ச்சியில் அதன் உள் பாகங்கள் சேதமடைவதால், அதனை உபயோகிப்பது நல்லதல்ல.