Fathima Beevi Passes Away: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி வயது மூப்பு காரணமாக இன்று காலாமானார். அவருக்கு வயது 96. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பாத்திமா பீவியின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் 1927ஆம் ஆண்டு கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் பிறந்தவர். தந்தையின் ஊக்குவிப்பால் சட்டத்துறையை தேர்வு செய்த பாத்திமா பீவி 1950ஆம் ஆண்டில் பார் கவுன்சில் தேர்வில் முதலிடம் பெற்றார். அதன்மூலம், பார் கவுன்சில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.



முதல் பெண் நீதிபதி


அவர் கேரளாவில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய நிலையில், 1974ஆம் ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1980ஆம் ஆண்டு பாத்திமா பீவி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சேர்ந்தார். தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | 'மாட்டிறைச்சி சாப்பிடுவியா' மாணவியை துன்புறுத்திய ஆசிரியை? - கோவையில் அதிர்ச்சி!


1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாகவும் நியமிகப்பட்டார். அதன்மூலம், உச்ச நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றை அவர் படைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் முஸ்லீம் பெண்மணி மற்றும் ஆசிய நாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆன முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.


தமிழ்நாட்டின் ஆளுநர்


1993இல் ஓய்வு பெற்ற பிறகு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரானார். பின்னர் 1997ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகவும் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நான்கு கைதிகள் தாக்கல் செய்த கருணை மனுக்களை நிராகரித்திருந்தார். 


மேலும் அப்போது 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க இவர் அனுமதி தெரிவித்ததை அடுத்து எதிர்கட்சிகள் இவர் மீது குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பாத்திமா பீவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். 'பாத்திமா பீவி ஓய்வுபெற்ற நீதிபதி. எனவே, அவருக்கு தெரியாத அரசியலமைப்பு சட்டம் ஏதுமில்லை, எனவே யாரும் அவருக்கு பாடம் கற்றுத் தர வேண்டாம்' என எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா பதிலடி கொடுத்திருந்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, பாத்திமா பீவி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும் அப்போது எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தொடர்ந்து, பாத்திமா பீவி 2001ஆம் ஆண்டில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தனர். 


மேலும் படிக்க | சபாநாயகர் அப்பாவு பேச்சால் அதிமுகவுக்குள் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ