கடன் தொல்லையால் மகனை  கொலை செய்துவிட்டு, பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் 37 வயதான ராஜா. இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இது தவிர தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் இவர் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார். 
இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு வயது 11. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.


ராஜா காலி மனைகளை பிளாட் போட்டு விற்பனை செய்து வரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தொழில் வளர்ச்சி, எதிர்பாராத செலவு என தொழில் சம்பந்தமாக ஏற்கனவே இவர் அதிகளவில் கடன் (Debt Problem) வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. 



ALSO READ: கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது! 


இந்நிலை நேற்றிரவு கனகதுர்கா தனது தம்பிக்கு, தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டுள்ளனர். காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்ததையும் கண்டுள்ளார். 


இதனையடுத்து அங்கு வந்த கள்ளபெரம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



ராஜா  கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர். மகனை கொலை செய்துவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!


ALSO READ: கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகன் தூக்கிட்டு தற்கொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR