கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகன் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கணவன், மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2021, 08:42 AM IST
கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகன் தூக்கிட்டு தற்கொலை title=

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கல்லூரி பேராசிரியரான இவருக்கு அனுராதா என்ற மனைவியும் விஷ்ணு மற்றும் பரத் என்ற இரு மகன்கள் உள்ளனர் .மூத்தமகன் விஷ்ணு திருமணமாகி பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தனியார் ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்தபடி பணியாற்றி வருகிறார்.  

ராமலிங்கத்திற்கு அதிகப்படியான கடன்தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மூத்த மகன் விஷ்ணு ராமலிங்கத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார் . நீண்ட நேரமாகியும் வீட்டிலுள்ள யாரும் தொலைப்பேசி அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த விஷ்ணு தன்னுடைய உறவினரை தொலைப்பேசி வாயிலாக அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார். 

ALSO READ அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

இதனைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற அவரது உறவினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒரு மின்விசிறியில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோரும்  மற்றொரு மின்விசிறியில் பரத்தும் புடவையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டனர். தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்ற ராமலிங்கத்தின் உறவினர்கள் மூவரின் சடலத்தை மீட்டனர். 

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து  காவேரிபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மூவரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News