திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர், கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி முரளி . இன்று பிற்பகலில் முரளி, தன்னுடைய உறவினரின் காரிய சடங்கிற்காக ஆரணி பாலாஜி பவன் சைவ உணவகத்தில் 35 சாப்பாடு வாங்கி சென்றுள்ளார். உறவினர்களுக்கு சாப்பாடு பரிமாறுகையில், சாப்பாட்டிலுள்ள பீட்ரூட் பொறியலில் இறந்த எலியின் தலை இருந்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சியடைந்து வாந்தி எடுத்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட முரளி மற்றும் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் பாலாஜி பவன் ஓட்டலுக்கு சென்று இறந்த கிடந்த எலியின் தலையை கைகளில் வைத்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஓட்டலில் பரப்பரப்பு நிலவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவலறிந்த ஆரணி நகர போலிஸார் ஓட்டலுக்கு சென்று இறந்த எலியின் தலையை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்து உண்மை தன்மையை கண்டறியப்படும் என உறுதியளித்தின் பேரில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர் 


ஆரணியில் உள்ள 7 ஸ்டார் உணவகத்தில் உணவருந்திய நதியா என்ற மாணவியும், 5 ஸ்டார் எலைட் பிரியாணி சென்டரில் பிரியாணி சாப்பிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் திருமுருகன் என்ற மாணவனம் ஃபுட் பாய்சன் ஆகி இறந்த சம்பவம் மற்றும் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாண்டியன் அசைவ உணவகத்தில் கெட்டுப்போன காடைக்கறியில் புழுக்கள் நெளிந்து இருந்ததையும் வெட்ட வெளிச்சம் போட்டு காண்பித்த நிலையிலும், மீண்டும் ஆரணியில் சைவ உணவகத்தில் அசைவ உணவகம் போல் எலியின் தலை கறி பொரியலில் இருந்த சம்பவம் ஆரணியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | சோலாப்பூரியில் நெளிந்த புழுக்கள்; வசந்த பவன் கொடுத்த அதிர்ச்சி!


ஆரணியில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன என பொதுமக்கள் கூறினர். மேன் மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ