விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னி விற்பனை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக கடன் வறுமை ,குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் சிறுநீரகம் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலம்பாளையம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பினார். 


மேலும் படிக்க | கள்ளழகருடன் மதுரைக்கு சென்ற தற்காலிக உண்டியல்... வசூல் என்ன தெரியுமா?


காவல்துறை நேரடி விசாரணை


இதனை அடுத்து திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புகார் அளித்த பாலசுப்பிரமணியம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யும் சிறுநீரக இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது சம்பந்தப்பட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ,
முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மீண்டும் தொடங்கிய அவலம்


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்பனை நடைபெறுவதாக தமிழகம்  முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டு, ஒரு சிலர்  கைது செய்யப்பட்டனர்.  தற்போது மீண்டும் சிறுநீரகம் விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் தொடரும் இந்த சிறுநீரக விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கிட்னி விற்பனை ஏன்?


விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி சொற்பமாக இருந்தாலும், அவைகூட குறித்த நேரத்துக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க விசைத்தறி தொழிலாளர்கள் தினக் கந்து, வாரக்கந்து என கந்துவட்டி கொடுமையை எதிர்கொள்கின்றனர். ஓரிரு வருடங்களில் கந்துவட்டியையும் கட்ட முடியாமல், விசைத்தறிக்காக வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் பெரும் சுமைக்கு ஆளாகும் விசைத்தறி தொழிலாளர்கள், வாங்கிய கடனை அடைப்பதற்கான கிட்னியை விற்பது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். விசைத்தறி தொழிலில் இருக்கும் இடைத்தரகர்கள் பிரச்சனையும் அவர்கள் கடன் வலையில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தபிறகு இந்த சிக்கல் மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 4 வயது சிறுவன் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ