கடலூர் மாவட்டம் பண்ருட்டியை  சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் விபத்து ஏற்பட்டாலோ பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்தாலோ முதலுதவிக்கு பண்ருட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் இன்று பிற்பகலில் கொடிய விஷம் கொண்ட சாரைப்பாம்பு நுழைந்ததால் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



ALSO READ |  Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பண்ருட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த கொடிய விஷம் கொண்ட சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். 


தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து  செயல்பட்டதால் கொடிய விஷம் கொண்ட சாரைப்பாம்பால் எந்த ஒரு உயிர் சேதமும்  ஏற்படாமல் தடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது .



ALSO READ | பாப் பாடகியின் மேதாவின் வாயை பதம் பார்த்த பாம்பு -அதிர்ச்சி வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR