பாப் பாடகியின் மேதாவின் வாயை பதம் பார்த்த பாம்பு -அதிர்ச்சி வீடியோ!

Viral Video: பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த கறுப்பு பாம்பு. இணையத்தில் வைரல்-Watch

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 12:14 PM IST
பாப் பாடகியின் மேதாவின் வாயை பதம் பார்த்த பாம்பு -அதிர்ச்சி வீடியோ! title=

Viral Video: விலங்குகளுடன் சேர்ந்து வேலை செய்வதோ அல்லது அதற்கு பணிவிடை செய்வதோ அவ்வளவு எளிதானது அல்ல, எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து ஏற்படலாம். "Bitch Don't Be Mad" என்ற பாடலின் பாடகியான Maeta, சமீபத்தில் ஒரு மியூசிக் போட்டோ ஷூட் வீடியோவை உருவாக்கும் போது ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியது. அதாவது அவரின் முகத்தில் பாம்பு கடித்தது.

அதிர்ஷ்டவசமாக, பாம்பு கடித்ததில் அவருக்கு விஷம் எதுவும் ஏறவில்லை. 21 வயதான பாடகி, தனது பாம்பு கடி அனுபவத்தை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, அந்த சம்பவத்தின் 5-வினாடி கிளிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வீடியோவில் பாடகர் கருப்பு சரிகை உடையில் தரையில் படுத்திருப்பதைக்  காணலாம். அவரின் மார்பு மீது கருப்பு நிற பாம்பு ஒன்று இருக்கிறது. அது ஊர்ந்து மெதுவாக அவரின் கன்னத்தை நோக்கி செல்கிறது. அதேநேரத்தில் வெள்ளை நிற பாம்பு ஒன்றும் அவர் மீது வைக்கப்படும் போது, திடிரென கருப்பு நிற பாம்பு அவரின் கன்னத்தில் கடித்து விடுகிறது. உடனடியாக பாம்பை பாடகி தூக்கி எறிகிறார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maeta (@maetasworld)

ALSO READ |  பாம்பை பாடாய் படுத்தும் சிறுவன், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

டிசம்பர் 20 ஆம் தேதி ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ 11.9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ALSO READ | பரம எதிரிகளான 3 நாகப்பாம்புகள் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News