நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை கோடை விழாக்கள் நடைபெற உள்ளன. கோடைத் திருவிழா மே மாதம் முதல்வாரத்தில் இருந்து களைகட்டும். மே மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி நடைபெற இருக்கிறது. 13, 14, 15 ஆகிய தேதிகளில் 9வது வாசணை திரவிய கண்காட்சி கூடலூரில் நடைபெற இருக்கிறது. 17வது ரோஜா கண்காட்சி 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடைபெற இருக்கிறது. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 124வது மலர் கண்காட்சி 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 2 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் ‘குளுகுளு’ ஊட்டி!


இந்த நாட்களில்தான் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து கண்ணைக் கவரும் மலர்களைக் கண்டு ரசித்துச்செல்வதுண்டு. அதன்பிறகு, 28, 29 ஆகிய தேதிகளில்  62வது பழ கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் நீலகிரி கோடை விழாவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் திரைப்பட சூட்டிங் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மலர்க் கண்காட்சி நடைபெறும் இடங்கள், பூங்காக்கள் பராமரிக்கும் பணி அடுத்த மாதம் இறுதிவரை நடைபெற உள்ளதால் இந்த இக்கட்டான நேரத்தில் சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களையும், பூங்கா நிர்வாக ஊழியர்களையும், பொதுமக்களையும் தொந்தரவு செய்யாதபட்சத்திலும்கூட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் முக்கியமான சுற்றுலா தலங்களில் பராமரிப்புப் பணி செய்ய இருப்பதாலும் சினிமா படப்படிப்புக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR