கோவில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்க கூடாது என சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்  செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளதாக  தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தனக்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தைரியமா? விடியலுக்கா? - பதிவு போட்ட சவுதாமணியின் கைதும் முழு பின்னணியும் !


இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


அதில்,  கோவில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் கார்த்தி கோபிநாத் வசூலித்து உள்ளதாகவும், அதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவில் திருப்பணிக்களுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்தால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியும், கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் இருந்தும் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை பதில் மனுவில் தெரிவிதுள்ளது. 


மேலும் படிக்க | அண்ணாமலையின் திறமை கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே இல்லையாம் - அதிர்ச்சி கொடுத்த ராதாரவி


இதனையடுத்து, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜூலை 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ