மார்ச் 1 முதல் ரேஷன் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு கட்டாயம்
மார்ச் 1-ம் தேதி முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1-ம் தேதி முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 1.94 கோடி ரேஷன்கார்டுகளில் 1.89 கோடி கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு விட்டன. ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி 99% நிறைவடைந்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்டும்" என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.