மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!
அரியலூர் மாவட்ட ஆட்சியரைப் போல் நடித்து வாட்ஸ்ஸாப் மூலம் பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மோசடி என்று வந்துவிட்டால் தங்கு தடையமின்றி சிக்கிக்கொள்ளாமல் மக்களை எளிதில் ஏமாற்றும் கலைகளை கையாள்கின்றனர் மோசடியாளர்கள். இதுவரை லிங்க்கு, மெசேஜ், மின்னஞ்சல் என அனைத்து வகைகளிலும் பணம் பறிக்க மறைமுக கொள்ளையர்கள் முயன்று வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, அதிகாரத்தில் உள்ள ஒருவரது அடையாளத்தை திருடி அவரது சக பணியாளர்களிடமிருந்தே பணம் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பற்றி தெரியுமா?
அப்படி ஒரு முயற்சி அரியலூரில் நடைப்பெற்றுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி பணம் பறிக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.
மேலும் படிக்க | தினசரி ரூ.167 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் கோடியில் அள்ளலாம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பெயர் மற்றும் படத்தை வாட்சப்பில் வைத்து 7061656848 என்ற எண்ணில் வாட்ஸ்ஸாப் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கணக்கிலிருந்து மாவட்ட அலுவலர்களுக்கு வாட்ஸ்ஸாப்பில் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில் மாவட்ட ஆட்சியர் என்னுடைய புதிய நம்பர் இது என்றும், இதில் உள்ள கிப்டு கூப்பன் 10 ஆயிரம் என்றும், உடனடியாக 10 கார்டு வாங்கி பயனடையுங்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பதுபோல் அந்த வாட்ஸ்ஸாப் மெசேஜ்ஜில் குறிப்பிட்டுள்ளது.
இது சிலர் நிஜம் என்று நம்பி கூப்பனை வாங்கவும் முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதிக்கு போன் செய்து இது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது வரை இது குறித்து அறிந்தில்லாத அவர், தான் இல்லை என்றும், தான் எந்த கூப்பனையும் வாங்க கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நிலைமையை புரிந்துக்கொண்ட ஆட்சியர் உடனடியாக தனது வாட்ஸ்ஸப் கணக்கிலிருந்து ஸ்டாடஸ் மூலம் அந்த மோசடி கும்பலின் போன் நம்பரை பதிவிட்டு இது நான் இல்லை. இவர்களிடம் எந்த கூப்பன்களையும் வாங்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் மக்களிடம் பண விஷயத்தில் எவரிடமும் முழு கவனத்துடன் இருக்கவும் என மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
எவரேனும் பணம் கேட்டு மெசேஜ் செய்தால் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அவர் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள முற்படுங்கள். அப்படி தெரிந்துகொள்ள முடியாவிட்டால் அவர்களிடம் வரும் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை தவிர்த்திடுங்கள் என பொது மக்களை போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | HDFC முக்கிய அப்டேட்; பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR