தினசரி ரூ.167 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் கோடியில் அள்ளலாம்

SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2022, 03:16 PM IST
  • எஸ்ஐபி பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்.
  • கோடீஸ்வர் ஆக நல்ல வாய்ப்பு
  • இலக்கிற்கு ஏற்ப திட்டம்
தினசரி ரூ.167 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் கோடியில் அள்ளலாம் title=

எதிர்காலத்தைப் பற்றி இப்போதிலிருந்து திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக கழிக்கலாம். பணத்தை பெருக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம்  எஸ்ஐபி ஆகும். ஒரு நாளைக்கு 169 ரூபாய் முதலீட்டில் 11 கோடிக்கும் அதிகமான நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறோம். அதை நாம் சேமிக்கவும் செய்கிறோம். ஆனால் முதலீடு இல்லையே என்பவர்களும் இந்த லிஸ்டில் உண்டு. இதனால் எந்த பலனும் உங்களுக்கு இல்லை. நீங்கள் அடைய நினைக்கும் இலக்கினை தொட, கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு முதலீடு மட்டுமே கைகொடுக்கும். அதன்படி அதனை அடைய நீங்கள் இப்போதிலிருந்தே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

நிபுணர்கள் பொதுவாக உங்களது முதலீட்டினை குறைந்த வயதில் இருந்தே முதலீடு செய்ய அறிவுறுத்துகின்றனர். இது ஓய்வூகாலத்தில் மிகப்பெரிய அளவில் கார்ப்பஸினை உருவாக்க பயன்படும். உதாரணத்திற்கு 25 வயதில் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதன்படி இதற்கு ஒரு நாளைக்கு 167 ரூபாய் முதலீட்டினை, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்தால் ஓய்வுகாலத்தில் அதாவது 60 வயதில் கார்ப்பஸ் தொகை சுமார் 11.33 கோடி ரூபாய் வரை பெற முடியும். அதேபோல வருடத்திற்கு உங்களது முதலீட்டினை 10% அதிகரிக்கலாம். லாப விகிதம் சுமார் 14% என வைத்துக் கொள்ளலாம்.

மாதாந்திர முதலீடு                ரூ 5000
மதிப்பிடப்பட்ட வருவாய்     14%
ஆண்டு SIP அதிகரிப்பு          10%
மொத்த முதலீட்டு காலம்     35 ஆண்டுகள்
மொத்த முதலீடு                     ரூ.1.62 கோடி
மொத்த வருவாய்                   ரூ.9.70 கோடி
முதிர்வு தொகை                     ரூ.11.33 கோடி.

மியூச்சுவல் ஃபண்டுகளில் வருடத்திற்கு சராசரியாக 12 - 16% லாபம் கிடைக்கின்றது. ஆக இந்த லாப விகிதங்களுக்கும், உங்களது முதலீட்டு அதிகரிப்புக்கும் ஏற்ப உங்களது கார்ப்பஸில் மாற்றம் இருக்கலாம்.

மேலும் படிக்க | LIC IPO: மே 17 அன்று பை, செல், ஹோல்ட்? செய்ய வேண்டியது என்ன, நிபுணர்கள் கருத்து 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News