HDFC முக்கிய அப்டேட்; பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களின் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2022, 02:15 PM IST
  • HDFC முக்கிய அப்டேட்
  • எஃப்டி வட்டி விகிதத்தை அதிகரிப்பு
  • மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
HDFC முக்கிய அப்டேட்; பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு title=

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்டுக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. வெவ்வேறு தவணைக்காலங்களின் டெபாசிட்டுக்கான விகிதங்களை வங்கி அதிகரித்துள்ளது.

புதிய வட்டி விகிதங்களில் எச்டிஎஃப்சி வங்கி 7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு 2.5 சதவீத வட்டியை தொடர்ந்து செலுத்தும். அதாவது அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 30 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 3 சதவீதம் மட்டுமே இருக்கும். அதேபோல் 91 நாட்கள் முதல் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும்பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதத்தை சாதாரண மக்களுக்கு வழங்க வங்கி அறிவித்துள்ளது. அதே சமயம், 6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு 4.4 சதவீத வட்டி தொடரும்.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி 

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலவரையறை கொண்ட பிக்சட் டெபாசிட்டுக்களுக்கு 4.4 சதவீதத்திற்கு பதிலாக 4.5 சதவீத வட்டியை வங்கி தற்போது செலுத்தும். அதே சமயம், 1 முதல் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

அதே நேரத்தில், 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி, முன்பு 5.2 சதவீத ஆக இருந்தது, தற்போது இது 5.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, 5.45 சதவீதத்திற்கு பதிலாக, இப்போது 5.6 சதவீத வட்டி வழங்கப்படும். முன்னதாக, 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.6% ஆக இருந்தது. தற்போது அது 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
மூத்த குடிமக்களைப் பொறுத்த வரையில், 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 0.5 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தைத் தொடரும். 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போதுள்ள 0.5 சதவீத பிரீமியத்தை விட 0.25 சதவீதம் அதிகமாக இருக்கும். இது 30 செப்டம்பர் 2022 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News