திமுக அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அதிமுக சார்பில் உண்ணாவிரப்போராட்பேசுகையில், தைரியமிருந்தால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தல் வைக்க வேண்டும், வைத்தால் எடப்பாடிதான் முதல்வர் என சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி, கேட்ட திட்டங்களையெல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, தைரியமிருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள் எனக்கூறினார். எப்படியாவது உதயநிதியை ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும், அதன்பிறகு முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் ஸ்டாலினின் ஒரே கொள்கை என விமர்சித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி வந்த ஒன்றரை வருடத்தில் ஐம்பதாயிரம் கோடி கொள்ளையடித்துள்ளதாக புகார் கூறிய எஸ்.பி.வேலுமணி, தனக்கு தெரிந்து இந்த ஆட்சி ஐந்து வருடங்கள் போகாது, இடைத்தேர்தல் எப்போது வைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இருநூறு தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று முதல்வராக வருவார் என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சென்னை டூ கத்தார் : விமானியின் சாமர்த்தியத்தால் தப்பித்த 146 உயிர்கள்... ஏர்போர்டில் பரபரப்பு


இதனைத்தொடர்ந்து பழச்சாறு அருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட எஸ்.பி.வேலுமணி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கோவையில் சாலைகளை செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்த பிறகு நெடுஞ்சாலை துறை அமைச்சர் கோவை வந்ததாகவும், அதன் பிறகு சில இடங்களில் பேட்ச் போடும் பணி நடைபெற்று வருவதாகவும், ஆனால் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளை செப்பனிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளில் மருந்துவ வசதி இல்லை என குற்றம்சாட்டியதோடு, உடனடியாக அதை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாக கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உண்ணாவி போராட்டத்திற்கு பிறகாவது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என  வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு அத்திக்கடவு அவிநாசி திட்டம், அரசு  மருத்துவமனை மேம்படுத்தல், பாலங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுதல் , ஆறு புதிய கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ள என்னென்ன தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் எனக்கூறிய எஸ்.பி.வேலுமணி எதாவது பதிலைச் சொல்லி நழுவாமல் கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் உதயநிதியை துணைமுதலமைச்சராக்கலாம் எனவும் அதிகாரம் அவரிடமே உள்ளது எனவும், அப்படி இருக்கும்போது அனைவரும் சேர்ந்து சொல்லி செய்வது போன்று பாவனை காண்பித்து வருவதாக விமர்சித்த எஸ் பி வேலுமணி அண்ணா துவங்கிய திமுக கட்சி இன்று குடும்ப கட்சியாக மாறி உள்ளது என தெரிவித்தார். துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள், அவரது வாரிசுகள் நிறைய பேர் இருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பில்லையா? என கேட்ட எஸ்.பி.வேலுமணி, திமுக என்றால் இவர்களேதான் வரவேண்டுமா என்பது தான் கேள்வி எனவும் சட்டமன்றம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் உதய நிதி புராணம் தான் பாடுகிறார்கள் என  சாடினார். எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது எந்த திட்டம் கொண்டுவந்தாலும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் எனவும் தற்போது மக்களை பற்றி கவலைபடமால் எப்படியெல்லாம் வருமானம் வரும் என ஸ்டாலின் குடும்பம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பணத்தையும் கொடுப்பதாகவும், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாவம் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | டிசம்பர் 5லிருந்து 8வரை உஷாரா இருங்க மக்களே... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ