தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலிக்கு வந்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில் தாம்பரம் - நெல்லை இடையே 'சுவிதா' சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் அக்டோபர் 20 மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும் என்றும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. 


சுவிதா சிறப்பு ரயிலில் படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட் ரூ.1,275 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175 ஆகவும் உயர்ந்துள்ளன.