இந்தியாவிற்கு அருகில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவர், சொந்தமான பைபர் படகு வைத்துள்ளார்.


அவரது படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் என மூன்று மீனவர்கள்  கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.


அப்பொழுது அங்கு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை தாக்கினார்கள்.


இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.




கம்பு, இரும்புகம்பி கொண்டு தாக்கிய திருடர்கள், படகில் இருந்த புஷ்பவன கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை கடலில் தள்ளி விட்டுள்ளனர். 


ALSO READ | மர்ம விலங்கு கடித்து 15 செம்மறி ஆடுகள் பலி


பின்பு படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி செல்போன்  உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். 


படகில் இருந்த டீசலையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றதால்,  தாக்குப்பட்டு காயமடைந்த மீனவர்களால், கரைக்கு வர முடியவில்லை. 


இறுதியில் ஒருவழியாக, அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்களிடம் டீசலை பெற்றுக் கொண்டு,  ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.


காயமடைந்த மீனவர் மூவரையும், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மூன்று மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இலங்கைக் கொள்ளையர்களின் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


ALSO READ | நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார் - உயிர் தப்பிய 3 மாணவர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR