நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார் - உயிர் தப்பிய 3 மாணவர்கள்

ஆம்பூர் அருகே நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், 3 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:56 AM IST
  • நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
  • அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 3 மாணவர்கள்
  • ஆம்பூர் காவல்துறை விசாரணை
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார் - உயிர் தப்பிய 3 மாணவர்கள் title=

கர்நாடக மாநிலம், பொன்னனள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் முஜீத். தனியார் கல்லூரி ஒன்றில் அனிமேஷன் படித்து வரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு குறும்படங்களை எடுத்த அவரும் அவரது நண்பர்களும், வேலூர் வழியாக மீண்டும் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ALSO READ | மர்ம விலங்கு கடித்து 15 செம்மறி ஆடுகள் பலி...! கிராம மக்கள் அதிர்ச்சி

ஆம்பூர் அண்ணா நகர் அருகே அவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த ஓட்டுநர் மற்றும் முஜீத் உள்ளிட்டோர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். அவர்கள் காரில் இறங்கிய அடுத்த நொடிப்பொழுதில் கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

ALSO READ | சரக்கில் தண்ணீர் கலந்த ஆசாமிகள் - குடிமகன்கள் அதிர்ச்சி..!

நல்வாய்ப்பாக முஜீத் மற்றும் அவரது நண்பர்கள் எந்த காயமுமின்றி உயிர்பிழைந்தனர். அதேநேரத்தில் அவர்களது உடமைகள், கேமரா உள்ளிட்ட பொருட்களுடன் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால், அப்பகுதி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து, ஆம்பூர் நகர காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News