மர்ம விலங்கு கடித்து 15 செம்மறி ஆடுகள் பலி...! கிராம மக்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் 15 செம்மறியாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:55 AM IST
  • திருவண்ணாமலையில் ஆட்டைக் கடித்த மர்ம விலங்கு
  • 15 செம்மறியாடுகள் பலி - கிராம மக்கள் சோகம்
  • மர்ம விலங்கை கண்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
மர்ம விலங்கு கடித்து 15 செம்மறி ஆடுகள் பலி...! கிராம மக்கள் அதிர்ச்சி title=

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துராமன். 40க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை வைத்திருக்கும் அவர், நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் அவற்றை அடைத்து வைத்துள்ளார். 

ALSO READ | சரக்கு பாட்டிலில் கலப்படம் செய்த ஆசாமிகள் கைது..!

இரவு முழுவதும் ஆட்டுக் கொட்டகையில் காவல் இருந்த முத்துராமன் காலை 6 மணிக்கு மேல் வீட்டுக் சென்றுள்ளார். சுமார் 2 மணி நேரம் கழித்து 8 மணியளவில் வீட்டில் இருந்து தனது கொட்டகைக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மர்ம விலங்கு ஒன்று கடித்ததில் சுமார் 15 ஆடுகள் மற்றும் குட்டிகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளன. எஞ்சிய ஆடுகள் அலறிய நிலையில், கும்பலாக ஒருபுறமாக நின்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துராமன் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ | திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!

அவர்கள் அங்கு வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், இறந்த ஆடு ஒன்றை எடுத்துச் சென்ற அவர்கள், பிரதே பரிசோதனையின் முடிவில் விலங்கை அடையாளம் கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். பன்னியூர் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகள் அல்லது வெளி நாய்கள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கண்காணிக்குமாறும் மருத்துவர்கள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News