“பெண்களின் உதிரம் கொட்டுகிறது. இந்த நாடு உருப்படாது” - ரஜினிகாந்த் பேச்சு
தமிழர்களை புதைக்கவில்லை. விதைத்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதன் காரணமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவருடைய வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். எம்.பி. ஒருவர் வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | பிரதமர் மாளிகை முற்றுகை: ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ராஜபக்சவின் வீடியோ
இந்த நிலையில் இலங்கை அரசு, ராணுவ அடக்குமுறை கொள்கையால் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறது என என்றோ ஒரு நாள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசியது இன்று வைரல் ஆகிவருகிறது. இந்த உண்மையை சிங்கள பேரினவாதம் என்றாவது ஒருநாள் உணர்ந்துகொள்ளும் என்று பிரபாகரன் பேசியதால் அவர் தீர்க்கதரிசி என்று தமிழ் தேசியவாதிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கை பற்றி பேசிய மற்றொரு வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது. 2008ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஏழை மக்களின் வேதனைக் காற்று பட்டாலே அந்த நாடு உருப்படாது என்று பேசியிருந்தார். எந்த விதத்திலும் சாமானியர்கள் கஷ்டப்படக் கூடாது என்று பேசிய ரஜினிகாந்த், பெண்களின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது என்றார்.
தமிழர்கள் இலங்கையில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்று பேசிய ரஜினிகாந்த், அந்த விதை உங்களை நிம்மதியாக வாழ விடாது என்றார். இந்த வீடியோவையும் தற்போது தமிழ் தேசியவாதிகளும், ரஜினி ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR