சென்னை: இலங்கையைச் சேர்ந்த டான், அங்கோடா லோக்கா, ஜூலை மாத தொடக்கத்தில் மர்மமான முறையில் கோயம்பத்தூரில் இறந்தார். இந்த வழக்கு குறித்து குற்றப்பிரிவு-குற்ற புலனாய்வுத் துறை (CBCID) இனி விசாரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு காவல் பணிப்பாளர் நாயகம் ஜே.கே. திரிபாதி இந்த வழக்கை கோயம்புத்தூர் போலீசாரிடமிருந்து CBCID-க்கு மாற்றினார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (FIR) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். ஒன்று சந்தேகத்திற்கிடமான மரணத்திற்காகவும், மற்றொன்று ஆதார் அட்டை பெற தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அங்கோடா லோக்கா (Angoda Lokka) என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். 2018 முதல் கோயம்புத்தூரில் பிரதீப் சிங் என்ற பெயரில் அவர் வசித்து வந்ததாகவும் அங்குள்ள ஜிம்களுக்கு புரதச் சத்துக்களை வழங்கி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


மதுரைச் சேர்ந்த வக்கீல் டி.சிவகாமி சுந்தரி மற்றும் அவரது திருப்பூர் நண்பர் எஸ்.தியானேஸ்வரன் ஆகியோரின் உதவியுடன், இந்த இலங்கை டான் கோயம்புத்தூரில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்தார். அவர் இலங்கை பெண்ணான அமானி தஞ்சியுடன் வசித்து வந்தார். அமானியின் கணவரை இலங்கையில் இருக்கும்போதே லோக்கா கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


முன்னதாக சுந்தரி சில மாதங்களுக்கு டான் லோக்காவிற்கு மதுரையில் உள்ள தனது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தார்.


இலங்கையின் நிழலுலக தாதாவான லோக்கா சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் ஜூலை மாத துவக்கத்தில் இறந்தார். தன்ஜியின் வேண்டுகோளின் பேரில், லோக்கா இறந்த மறுநாள் சுந்தரி கோயம்புத்தூருக்குச் சென்று, லோக்கா தனது உறவினர் என்றும், இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் நகர போலீசாரிடம் தெரிவித்தார்.


பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுந்தரி லோக்காவின் உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று அங்கு தகனம் செய்தார்.


இதற்கிடையில், கோயம்புத்தூரில் அங்கோடா லோக்கா கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் என்ற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், மேலதிக விசாரணைக்கு இலங்கை போலீசார் தமிழக போலீஸை அணுகினர்.


இதன் அடிப்படையில், நகர காவல்துறையினர் வழக்கை மீண்டும் ஆராய்ந்தபோது, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்றும் சம்பந்தப்பட்ட பெண்கள் அங்கோடா லோக்காதான் பிரதீப் சிங் என்று ஏமாற்றியதையும் கண்டறிந்தனர். உடலைப் பெற்ற பின்னர் அவர்கள் அதை மறுநாள் மதுரையில் தகனம் செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: சுஷாந்த் வழக்கு விசாரணையில் திருப்புமுனை, பாட்னா SPஐ தனிமைப்படுத்தியது BMC


கைது செய்யப்பட்ட நபர்களுடனான முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவர் இலங்கையின் கொழும்பின் கோட்டிகாவட்டாவைச் சேர்ந்த மத்துமகே சந்தனா லசந்தா பெரேரா எனப்படும் அங்கோடா லோக்கா (வயது 35) என்று அறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து சேரன் மானகரில் ஒரு வாடகை வீட்டில் அவர் வசித்து வந்தார். அவர் உணவு சப்ளிமெண்ட் தொழிலை நடத்தி வந்தார். மார்ச் மாதம் கொழும்பிலிருந்து கோவைக்கு வந்த தனது காதலி அமானி தன்ஜியுடன் அவர் வசித்து வந்தார். சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஷ்வரன் மூலமாக ஆதார் அட்டை மற்றும் குடியுரிமை ஆவணங்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களை அவர் பெற்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.


இலங்கை போலீஸ் உளவுத்துறையின் படி, ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் அங்கோடா லோக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அவரது சகோதரிகளில் ஒருவர் வீடியோ ஸ்ட்ரீமிங் மூலம் இறுதிச் சடங்குகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். அவருடன் இந்தியாவில் வசித்து வந்த ஒரு பெண்ணைப் பயன்படுத்தி அவரை படுகொலை செய்ய அவரது விரோதிகள் திட்டமிட்டிருந்தனர்,


போலீசார் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக சுந்தரி, தன்ஜி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணை தற்போது CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.